kசாகர்மாலா திட்டத்தில் 10,000 பேருக்கு வேலை!

Published On:

| By Balaji

துறைமுக மேம்பாட்டுக்கான சாகர்மாலா திட்டத்தின் கீழ் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் துறைமுக போக்குவரத்தை விரிவுபடுத்தவும் துறைமுகங்களின் தரத்தை மேம்படுத்தவும் சாகர்மாலா திட்டத்தை 2015ஆம் ஆண்டு முதல் மத்திய மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள சுமார் 7,500 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதிகளில் அயல்நாட்டுக் கப்பல் வர்த்தகப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை செயல்பாடுகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நாட்டில் உள்ள பழைய துறைமுகங்களை மேம்படுத்தவும், புதிய துறைமுகங்களை உருவாக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கப்பல் துறை இணையமைச்சரான மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஜூலை 15ஆம் தேதி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘சாகர்மாலா திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாயிலாக மொத்தம் 334 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவிலும், தமிழகத்திலும் 75 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், அஸ்ஸாம், பீகார் ஆகிய இடங்களில் தலா ஒரு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டங்கள் வாயிலாக சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடல் மற்றும் நீர்நிலைகள் வாயிலான சரக்குப் போக்குவரத்தில் 54 சதவிகிதம் கூடுதலான அளவில் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.’

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share