j
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கும் புதிய படம் சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகிவருகிறது. தற்போது ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் கார்த்திக் தனது அடுத்தப் படத்தை சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாக்கவுள்ளார்.
குறும்படங்கள் மூலம் கவனம் பெற்று திரைத்துறைக்குள் நுழைந்த இயக்குநர்களில் ஒருவர் விக்னேஷ் கார்த்திக். இவர் இயக்கிய ‘யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி 2’ குறும்படம் இணையத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது. இந்தக் குறும்படத்தைத் தழுவி திரைக்கதை அமைத்துள்ள அவர் சயின்ஸ் பிக்ஷன் பாணியில் இந்தப் படத்தை உருவாக்குகிறார். படத்தில் காதல், காமெடிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் கார்த்திக் பேசும் போது,“நான் எப்போதும் வழக்கத்துக்கு மாறான கதைகளையே கையாள்வேன். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தற்போது இறுதி செய்துவருகிறோம். இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” என்று கூறியுள்ளார்.
தினேஷ், ஸ்ரீதர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.�,