விமல், ஸ்ரேயா முதன்முறையாக இணைந்து நடிக்கும் சண்டக்காரி தி பாஸ் படத்தின் படப்பிடிப்பு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மை பாஸ்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது சண்டகாரி- தி பாஸ்.
இயக்குநர் ஆர். மாதேஷ் இயக்கும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனின் நடைபெற்றது. தற்போது படக்குழு கேரளாவில் மையமிட்டு இறுதிகட்டப் படப்பிடிப்பை மேற்கொண்டுவருகிறது. சுறா, மஹதீரா படங்களில் வில்லனாக நடித்த தேவ் கில் இப்படத்தில் நடத்துவருகிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்ப கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்துடன் பார்க்ககூடிய ஆக்ஷன் காமெடிப் படமாக சண்டக்காரி உருவாகிவருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
விமல் நடிப்பில் தொடர்ச்சியாக பெரிய வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் சமீபத்தில் வெளியான களவாணி 2 திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுவருகிறது. அதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் சண்டக்காரி திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஸ்ரேயா நடிப்பில் நரகாசூரன் திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் சண்டக்காரி படத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”