Kகுறையும் பெண்களின் தற்கொலை!

Published On:

| By Balaji

இந்தியாவில் பெண்களின் தற்கொலை விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே மிக வேகமாகக் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், அதில் 17 சதவிகிதத்தினர் அதாவது 1.35 லட்சம் தற்கொலைகள் இந்தியாவில் நிகழ்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. 2016ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 2.30 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். குறிப்பாகப் பெண்களின் தற்கொலை இந்தியாவில் மிக அதிகமாகவே இருக்கிறது. திருமணம் ஆகாமல் இருப்பது, விவாகரத்து, வரதட்சணை, பாலியல் தொல்லை, தேர்வில் தோல்வி, உடல்நிலை கோளாறு, புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட பெரும் வியாதிகள், மனநல பாதிப்பு, காதல் தோல்வி, வறுமை, வேலையின்மை, கள்ள உறவு, போதைப் பழக்கம் உள்ளிட்ட காரணிகள் தற்கொலைகளுக்குக் காரணங்களாக இருக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் பெண்களின் தற்கொலை விகிதம் குறைந்துவருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ஜூலை 12ஆம் தேதி மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “தேசிய குற்ற அறிக்கைப் பணியகத்திடமிருந்து கிடைத்த விவரங்களின்படி, இந்தியாவில், தற்கொலை செய்த பெண்களின் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டில் 44,256 ஆக இருந்தது. அது 2014ஆம் ஆண்டில் 42,521 ஆகவும், 2015ஆம் ஆண்டில் 42,088 ஆகவும் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பெண் தற்கொலைகள் குறைந்து வருவதை இது காட்டுகிறது” என்றார்.

பெண்களின் பாதுகாப்புக்காக *ஒரு நிறுத்த மையத் திட்டம்* செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பாதுகாப்பு, மருத்துவ உதவி, காவல் துறை ஆதரவு, இருப்பிட வசதி போன்ற உதவிகளை அரசு வழங்கிவருவதாகவும் ஸ்மிருதி இரானி கூறினார். நாடு முழுவதும் இதுவரையில் 506 ஒரு நிறுத்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்மிருதி இரானி தனது பதிலில் தெரிவித்தார்.

*லான்செட் பப்ளிக் ஹெல்த்* ஆய்வறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் உலகின் ஒட்டுமொத்த பெண் தற்கொலைகளில் இந்தியாவின் பங்கு 37 சதவிகிதமாக இருந்துள்ளது. இந்தியாவில் பெண்களின் தற்கொலைகள் குறைந்து வந்தாலும், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது தற்கொலை சம்பவங்கள் மிக அதிகமாகவே நடைபெறுகின்றன.

**

மேலும் படிக்க

**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

**[நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/07/12/48)**

**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**

**[நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/07/12/57)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share