தொடரும் ஊரடங்கு நாட்களில் தினம் ஒரு குழம்பு, பொரியல், வறுவல் என்று விதவிதமாக சமைத்துச் சாப்பிட்டாலும் ஏதோ ஒருவித சலிப்புதான் எல்லாரிடமும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் இந்த முருங்கைக்காய் ரசம் வைத்து சாப்பிடுங்கள். புத்துணர்வு அடைவீர்கள்.
**என்ன தேவை?**
முருங்கைக்காய் – 2
துவரம்பருப்பு – கால் கப்
பூண்டு – 4 பல்
தக்காளி – 1
புளிக்கரைசல் – 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள், பெருங்காயம் – அரை டீஸ்பூன்
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
நெய், உப்பு – தேவையான அளவு
**அரைக்க:**
தனியா, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
**எப்படிச் செய்வது?**
துவரம்பருப்பை வேகவிடவும். தக்காளி, முருங்கைக்காயைப் பொடியாக நறுக்கவும். வெறும் வாணலியில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தக்காளி, பூண்டு, முருங்கைக்காயைச் சேர்த்து வேகவிடவும். பிறகு மஞ்சள் தூள், புளிக் கரைசல், உப்பு, பெருங்காயத்தூள், பருப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பொடியைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். கடாயில் நெய் விட்டு உருக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். மல்லித்தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்.
[நேற்றைய ஸ்பெஷல்: உணவும் சமையலறையும்](https://minnambalam.com/k/2020/04/12/3)�,