kகிச்சன் கீர்த்தனா: முருங்கைக் கீரை சூப்

Published On:

| By Balaji

நாகரிக மோகத்தில் கீரை உணவுப் பழக்கத்தை மறந்துவிட்டோம். ஆனால், தற்போது உணவின் மீது ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு காரணமாக கீரைகளுக்கும் மவுசு கூடிக்கொண்டே வருகிறது. சந்தையில் அவற்றின் விலையை வைத்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு, சாதாரணமாக விலையில்லாமல் கிடைக்கும் முருங்கைக் கீரையை இப்போது விலைகொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அப்படி விலைகொடுத்து வாங்கிச் செய்யும் இந்த முருங்கை சூப் விலை மதிப்பில்லாதது.

**என்ன தேவை?**

முருங்கைக் கீரை – 2 கப்

கேரட் துருவல் – அரை கப்

தேங்காய்த் துருவல் – அரை கப்

பெரிய வெங்காயம் – 2

இஞ்சி துண்டுகள் – 3

பூண்டு – 1

கொத்தமல்லி – ஒரு பிடி

உப்பு – தேவையான அளவு

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

நெய் அல்லது தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

முருங்கைக் கீரையை காம்பு இல்லாத அளவுக்குச் சுத்தமாக்கிக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கேரட் துருவல், தேங்காய்த் துருவல், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை ஒன்றாக்கி அதில் ஐந்து கப் தண்ணீர்விட்டு கொதிக்கவைக்கவும். வெந்து வரும்போது தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியைச் சூடாக்கி நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், முருங்கைக் கீரையைக் கொட்டி லேசாக வதக்கவும். அதில் வேகவைத்த பொருட்களை ஒன்றாக்கி மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். பின்னர், ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கும் வடிகட்டிய நீரைச் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். இத்துடன் மிளகுத் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

**என்ன பலன்?**

முருங்கைக் கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன. ஆஸ்துமா, சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு இந்தச் சூப் உதவும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும் சக்தி முருங்கைக்கு உண்டு.

[நேற்றைய ரெசிப்பி: ராகி வேர்க்கடலை அல்வா](https://minnambalam.com/k/2019/07/14/8)

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share