Kகாதலின் உணர்ச்சிமிகு பயணம்!

Published On:

| By Balaji

�விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் ‘96’ படத்தின் டீசர் நேற்று (ஜூலை 12) வெளியாகியுள்ளது.

காதலின் வெவ்வேறு பரிமாணங்களை வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் சொல்லும் விதமாக 96 திரைப்படம் தயாராகி வருகிறது. த்ரிஷா, விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். ‘பசங்க’ , ‘சுந்தரபாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கி வருகிறார். பால்ய காலம், இளமைப் பருவம், முதுமை பருவம் என மூன்று காலகட்டங்களை விளக்கும் விதமாகப் படம் உருவாவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

தற்போது வெளியாகியுள்ள ‘96’ படத்தின் டீசரில் வசனங்கள் ஏதும் இல்லை. பின்னணி இசையும் ஒரு பாடலின் சில வரிகள் மட்டுமே ஒலிக்கின்றன.

புகைப்படக் கலைஞராக விஜய் சேதுபதி பயணம் மேற்கொள்வதாகவும் எதிர்பாராத விதமாக த்ரிஷாவை சந்திப்பதாகவும் டீசரில் இடம் பெற்ற காட்சிகள் உணர்த்துகின்றன. காதலோடு விஜய் சேதுபதியின் கைகளைத் தொட முயல்வதும், தாடியை எடுத்த பின் பார்க்கும்போது அடையும் ஆச்சர்யமும், பேசும்போது முகம் சட்டென கோபம் கொள்வதும், சோகத்தில் மூழ்குவதும், வெடித்து அழுவதும் என த்ரிஷா தனது உணர்வுகளைப் பார்வையாலே கடத்துகிறார்.

*“காதலே காதலே தனிப்பெரும் துணையே*

*கூடவா கூடவா போதும் போதும்*

*காதலே காதலே வாழ்வின் மீதி நீயே”*

என்ற பாடல் வரிகளும், குரலும் த்ரிஷா காட்டும் உணர்வுகளுக்கு வலு சேர்க்கின்றன. இயல்பான நடிப்பால் விஜய் சேதுபதி கவர்ந்தாலும் டீசர் முழுவதும் த்ரிஷாவே ஆட்கொண்டுள்ளார்.

[‘96’ டீசர்](https://www.youtube.com/watch?v=Qx7I1j1KVDE)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share