கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் கல்விக் கடன் 25 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளது.
2019 மார்ச் 31 நிலவரப்படி, இந்தியாவில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகக் குறைந்துள்ளது. 2013 மார்ச் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 3.34 லட்சமாக இருந்தது. அதாவது இந்தியாவின் கல்விக் கடன் சந்தை 25 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது. கல்விக் கடன் சந்தையின் வாராக் கடன் அளவு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 12.5 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதால்தான் கல்விக் கடன் வழங்குவது குறைந்துள்ளது.
2018-19 நிதியாண்டில் மட்டும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.22,550 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2015-16 நிதியாண்டில் ரூ.16,800 கோடி மட்டுமே கல்விக் கடனாக வழங்கப்பட்டிருந்தது. கல்விக் கடன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், வழங்கப்பட்ட கடனின் அளவு 34 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளது. தற்போது வரையில் கல்விக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 27.8 லட்சமாகக் குறைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 34 லட்சமாக இருந்தது.
வங்கிகள் எண்ணிக்கையை விடக் கடன் மதிப்பில்தான் அதிகக் கவனம் செலுத்துகின்றன என்று சி.ஆர்.ஐ.எஃப். ஹைமார்க் நிதி நிறுவனத்தின் பரிஜத் கார்க், *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)
**
.
**
[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
**
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
.
�,”