டெய்லர் ஸ்விஃப்டின் பாடல் வீடியோ வெளியாகிவிட்டது. பல வாரங்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பாடல் வெளியானதிலிருந்து பல விவாதங்களை உருவாக்கிவிட்டது. அவற்றில் ஒன்று, பாடகர் கான்யே வெஸ்ட் உடன் டெய்லர் ஸ்விஃப்டுக்கு இருக்கும் சர்ச்சை.
கான்யே வெஸ்டின் ‘Famous’ பாடல், பாப் உலகில் மிகப்பெரிய புரட்சியே உருவாக்கியது எனலாம். உலகின் மிகப்பிரபலமான நபர்களையெல்லாம் நிர்வாணமாகப் படுக்க வைத்து ‘புகழ்’ என்பது ஒன்றுமே இல்லை என்ற ரீதியில் அந்தப் பாடலைப் படமாக்கியிருந்தார்கள். அதில் இடம்பெற்ற ஒரு வரியில் “இன்னும் நான் ஸ்விஃப்டுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக நம்புகிறேன்” என்று கூறியிருந்தார். பாடல் ரிலீஸானபோது ஸ்விஃப்டிடம் இந்த வரி குறித்து சம்மதம் வாங்கிவிட்டேன் என்று கூறியிருந்தார் வெஸ்ட். ஆனால், கிராமி விருதுகளில் பேசியபோது ஒரு பெண்ணை எப்படியெல்லாம் இந்த சமுதாயம் தாக்குகிறது என்று ஸ்விஃப்ட் கண்ணீர் வடித்தார். அப்போது வெஸ்ட்டின் மனைவி கிம் காதர்ஷியான் ஸ்விஃப்டுடன் வெஸ்ட் பேசிய ஆடியோ பதிவை ரிலீஸ் செய்து பரபரப்பாக்கினார். இந்த சர்ச்சைகளெல்லாம் இவர்களின் பாடல் ஆல்பங்கள் விற்க சிறந்த கருவிகளாக இருந்தன. சில மாதங்களில் வெளியாகியிருக்கும் டெய்லர் ஸ்விஃப்டின் The Reputation ஆல்பத்தின் இரண்டாவது பாடலான [‘Ready For It?’](https://www.youtube.com/watch?v=wIft-t-MQuE)இன் வீடியோவை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில், கான்யே வெஸ்ட் தன்னை எப்படி Famous பாடலில் நிர்வாணமாக்கிப் பார்த்தாரோ, அதேபோல ஒரு Wax ஓட்டுக்குள் தனது கதாபாத்திரத்தை நிறுத்தும்படி கான்செப்டை உருவாக்கியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான Ghost in the shell திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது போலவே இந்த கான்செப்ட் இருந்தாலும், **பல பெண்களைக் காதலித்து அவர்களது வாழ்க்கையை மயானமாக்கிவிட்டு ஓடிப்போகும் ஆன்மாவாக அவன் இருந்தால், அவனை அடைத்துவைக்கும் குடுவையாக நான் இருப்பேன்** என்பதாகவே இந்தப் பாடலின் வரிகள் நகர்கின்றன.
�,”