Kஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்!

public

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பண்ணை பசுமை காய்கறி கடையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஆகஸ்ட் 4) ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: எங்களிடம் இருந்து வழிமாறி சென்றவர்கள் அனைவரும் விரைவில் ஒரே அணியாக ஒன்றிணைந்து செயல்படுவோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள். எனினும் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எளிமையானவர். அவரது வழியில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.அதேபோல், வருகிற 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக-வே ஆட்சியை கைப்பற்றும் என்று அவர் தெரிவித்தார். அதேபோல், டிடிவி.தினகரன் அதிமுக கட்சி அலுவலகம் வருவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *