�
வட சென்னை, மெட்ராஸ் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற பவல் நவநீதன் தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார்.
வி1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். ஒரு கொலையை துப்பறியும் விதமாக த்ரில்லர் பாணியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
போஸ்டரில் இரத்த வெள்ளத்தில் ஒரு பெண் சாலையில் விழுந்துகிடக்க அருகில் ஒரு குழந்தை கையில் பலூனுடன் நிற்கிறது. துப்பறியும் நிபுணர் கேஸ் ஃபைலை கையில் வைத்துள்ளார். அவர்களின் பின்னால் இரத்தம் வடியும் கத்தியுடன் கொலைகாரன் பின்னால் நிற்பதாக போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பெறும் ஓவியங்களின் பாணியில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் படத்தின் ரிலீஸ் தேதி மறைந்துள்ளது கண்டுபிடியுங்கள் என்று படக்குழு ஒரு புதிரையும் வைத்துள்ளது.
மெட்ராஸ், கபாலி ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற லிஜிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். சேதுபதி, சிந்துபாத் ஆகிய படங்களில் நடித்த லிங்கா இணைந்து நடிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.�,