kஇரண்டு வாரத்தில் நான்கு தங்கப் பதக்கம்!

Published On:

| By Balaji

இந்தியாவின் இளம் ஓட்டப்பந்தய வீராங்கனையான ஹிமா தாஸ், 15 நாட்களுக்குள் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

செக் குடியரசு நாட்டில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் கலந்துகொண்டார். பந்தய தூரத்தை 23.25 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார் ஹிமா தாஸ். இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான வி.கே.விஸ்மயா 23.43 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 19 வயதான ஹிமா தாஸ் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இதோடு சேர்த்து நான்கு தங்கப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளார்.

ஜூலை 2ஆம் தேதி போலாந்து நாட்டில் நடைபெற்ற போஸ்னன் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 23.65 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த ஹிமா தாஸ் தங்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் ஜூலை 7ஆம் தேதி போலாந்து நாட்டில் நடைபெற்ற குட்னோ தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 23.97 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். ஜூலை 13ஆம் தேதி செக் குடியரசில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்திலும் (23.43 விநாடி) ஹிமா தாஸ் தங்கம் வென்றிருந்தார். 15 நாட்களுக்குள் நான்கு தங்கப் பதக்கங்களை ஹிமா தாஸ் வேட்டையாடியுள்ளார்.

400 மீட்டர் ஓட்டப் போட்டியில் கவனம் செலுத்தி வரும் ஹிமா தாஸ் இந்த ஆண்டில் 200 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார். 400 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை நிகழ்த்தியவரான இவர், 2018ஆம் ஆண்டில் தாம்பரேவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். கடைசியாக நடைபெற்ற ஆசியப் போட்டிகளிலும் ஒரு தங்கம் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை ஹிமா தாஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share