இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு முன்னாள் கேப்டனாக இருந்த Jhulan Goswami, நடப்பு Women’s Quadrangular தொடரில் நேற்று நடைபெற்ற தென்னாப்ரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போது ஆஸ்திரேலியாவில் முன்னாள் வீராங்கனை Cathryn Fitzpatrick-கின் சாதனையை முறியடித்தார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாடத் தொடங்கிய ஜுலன் இதுவரை 153 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 181 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 180 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீராங்கனை கேத்ரின் சாதனையை முறியடித்துள்ளார். அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீராங்கனைகளின் பட்டியலில் இந்திய வீராங்கனை நீது டேவிட் 4ஆவது இடத்தில் உள்ளார். 2 மற்றும் 3ஆவது இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான லீசா மற்றும் கேத்ரின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
�,”