பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் போஸ்டர் ட்விட்டரில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தைத் தொடர்ந்து விக்ராந்த் நடிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பக்ரீத் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் ஒட்டகத்தைக் கொண்டு வெளியாகும் முதல் படம் என்ற வசனத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்தப் படம், ஒட்டகத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டுள்ளதை உணர முடிகிறது. இந்தப் படத்தில் விக்ராந்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இமான் இசையில் ஜெகதீசன் சுப்பு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் கடிதத்தில், “ஆர்.முருகராஜ் தயாரிப்பில், ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், இமான் இசையில், சகோதரர் விக்ராந்த்தின் நடிப்பில் இன்று ஆரம்பமாகும் இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்தின் வித்தியாசமான போஸ்டர் டிசைன் இந்தத் திரைப்படத்தைத் திரையில் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.�,”