_சசிகுமார் – ஜோ: கைகோக்கும் புதிய அணி!

Published On:

| By Balaji

கிராமத்துப் பின்னணியில் சசிகுமார், ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பட பூஜை சென்னையில் நேற்று (நவம்பர் 28) நடைபெற்றது.

ஜோதிகா நடிப்பில் இந்த வருடம் வெளியான ராட்சசி, ஜாக்பாட் ஆகிய படங்களில் ராட்சசி நல்ல வரவேற்பைப் பெற்றது, ஜாக்பாட் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மாஸ் ஹீரோயினாக இந்தப் படத்தில் முயற்சி செய்த ஜோதிகா தன் அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான பாத்திரங்களைத் தேர்வு செய்து வருகிறார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.

இந்த நிலையில், ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பட பூஜை நேற்று (நவம்பர் 28) சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அகரம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. கத்துக்குட்டி பட இயக்குநர் இரா.சரவணன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ள படத்துக்கு இமான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

இந்தப் படத்தின் பட பூஜையில், படக்குழுவினருடன் சிவகுமார், சூர்யா, பாண்டிராஜ், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் உறவுகளின் வலிமையைப் பேசவுள்ளது. படப்பிடிப்பு இன்று (நவம்பர் 29) முதல் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share