V‘தம்பி’க்காக காத்திருக்கும் ஜோ

Published On:

| By Balaji

கார்த்தி-ஜோதிகா நடிப்பில் உருவான தம்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று(நவம்பர் 15) வெளியானதைத் தொடர்ந்து, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘தம்பி’யின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ நேற்று(நவம்பர் 15) வெளியாகியது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மலையாளத்தில் முன்னணி இயக்குநராக அறியப்படும் ஜீத்து ஜோசப் இப்படத்தை இயக்கியுள்ளார். எளிமையான கதையை வலுவான திரைக்கதை முடிச்சுகளைக் கொண்டு ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுப்பதில் பெயர் பெற்றவர் ஜீத்து ஜோசப். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்திற்குப் பின் தமிழில் இவர் இயக்கும் இரண்டாவது படமிது.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. மர்மமான பின்னணியில் அறிமுகமாகும் கார்த்தியிடம் இருந்து டீசர் காட்சிகள் துவங்குகிறது. சகோதரன் கார்த்தியை எதிர்நோக்கி காத்திருக்கும் பாசமிகு அக்காவாக ஜோதிகா அறிமுகமாகும் இடம் அழகாகவும் அதே சமயம் எமோஷனலாகவும் இருக்கிறது. புதிர்கள் நிறைந்த இந்த டீசரில், அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். எமொஷனல்-த்ரில்லர் கதைக்கு பெயர் போன ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தம்பி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழில் சூர்யாவும், மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் நாகர்ஜூனாவும் தம்பி படத்தின் டீசரை வெளியிட்டனர்.

96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வயாகாம் 18 ஸ்டூடியோஸ், பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. டிசம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share