ஜோஸ் ஆலுக்காஸ்: மூகமுடியுடன் உலாவிய கொள்ளையன்!

Published On:

| By Balaji

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு வேலூரில் தோட்டப்பாளையம் அருகில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையின் பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர். சுமார் 30 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி இன்று வெளியானது. அதில் சிங்கம் போன்ற மூகமுடியை அணிந்துகொண்டு கடைக்குள்ளே உலா வரும் நபர் சிசிடிவி கேமராவில் பெயிண்ட் ஸ்பிரே அடிக்கிறார். அது மற்றொரு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன்கூறுகையில், கொள்ளையர்களை கண்டுபிடிக்க ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணையில் கிடைத்த தடயங்கள் மற்றும் தகவல்களை வைத்து கொள்ளையர்களை தேடி தனிப்படையினர் பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பட்டியலை எடுத்துள்ளோம். திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்றவர்களை ஓரளவுக்கு அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share