qநிமிட நேரத்தில் விற்றுத்தீர்ந்த ஜீசஸ் ஷூ!

Published On:

| By Balaji

‘இயேசு காலணிகள் விற்பனைக்கு’, இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் எல்லாருமே ஒரு நிமிஷம் அதிர்ந்து போய்ட்டாங்க.

பொதுவா நம்ம ஊர்ல புனிதப்படுத்தப்பட்ட இடங்களில காலணிகளைப் போட்டு நடக்க அனுமதிக்க மாட்டாங்க. அந்த இடங்களில எல்லாம் செருப்போ, ஷூவோ போட்டுப்போறது கூட பாவம்ன்னு சொல்லுவாங்க. அப்படி இருக்கும் போது இந்த ஜீசஸ் ஷூக்களை எப்படி உருவாக்க முடியும்? அத எப்படி நம்மால காலில போட்டு நடக்க முடியும்? காலணிகள் எப்படி புனிதமானதா மாறும்?

ப்ரூக்லின் லேபிள் கொண்ட எம்.எஸ்.சி.எச்.எஃப் என்ற நிறுவனம், புனித நீரினால் நிரப்பப்பட்டு பைபிள் வசனங்களையும் உள்ளடக்கிய ஷூக்களை உருவாக்கி இருக்காங்க. இதை விட ஆச்சரியம் Nike Air Max 97 ரகத்திலான அந்த காலணிகளில் இயேசுவோட இரத்தத் துளிகள் என்று தேவாலயங்களில் வழங்கப்படுகிற திராட்சை ரசம் இருக்கிறதாகவும் அந்த நிறுவனம் தன்னோட விளம்பரத்தில சொல்லி இருக்காங்க. அது மட்டுமில்லாம ஷூ லேஸ்ல ஒரு சிலுவையையும் இணைச்சு புனிதத்துக்கான அடையாளமாகவே அந்த ஷூக்களை மாத்தியிருக்காங்க. இப்படி புனிதமான இந்த காலணிகள் கிறிஸ்துவப் பாதிரியார்களால ஆசீர்வதிக்கப்பட்டு இன்னும் புனிதப்படுத்தப் பட்டிருக்கு.

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் இருக்கிற மத்தேயு 14:25 ஆம் வசனத்தில ‘இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடத்திற்கு வந்தார்’னு இயேசு நாதர் தண்ணீர் மேல நடந்த அதிசயம் சொல்லப்பட்டிருக்கும். அதே ஜோர்டன் நதியில இருந்து எடுக்கப்பட்ட புனித நீர் இந்த ஷூக்களுக்குள்ள அடைக்கப்பட்டிருக்கிறதா விளம்பரத்தில சொல்றாங்க.

இப்படி ஒரு அதிசயமான, புனிதமான ஷூ கெடச்சா சும்மா இருப்பாங்களா. காலில போட்டுக்கிறாங்களோ இல்லையோ அது வீட்டில இருக்கிறதே பெருமைதான்னு பலரும் நினைக்கிறாங்க. அதனால தான் விற்பனை அறிவிக்கப் பட்டு சில நிமிடங்களிலேயே இந்த காலணிகளோட விற்பனையும் முடிஞ்சிருச்சு. இந்த ஷூக்களோட விலை என்ன தெரியுமா? வெறும் 3000 டாலர் தாங்க. அதாவது இந்திய விலைப்படி இரண்டு லட்சத்து பதிமூன்றாயிரம் ரூபாய்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share