தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால், சட்டப்பேரவையைத் தொடர்ந்து நடத்த எந்தவித தடையும் இல்லை, ஆனால் புதிதாக திட்டங்களையோ அல்லது உத்தரவுகளையோ பிறப்பிக்க முடியாது. கடைசியாக பிறப்பித்த அரசாணை குறித்த தகவல்களை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். சந்தேகத்துக்குரிய பணபரிமாற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். பணபட்டுவாடா புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 50,000க்கு மேல் பணம் வைத்திருந்தால், உரிய ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.
தற்போது 45 துணை ராணுவ கம்பெனி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 50%க்கும் அதிகமான சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள்மட்டுமே வாக்களிக்க முடியும். தமிழகத்தில் 8000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மின்னணு வாக்கு இயந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் வாக்குச்சாவடிகளில் கண்டிப்பாக பின்பற்றப்படும்.
அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல், தனிநபர் வங்கி கணக்கில் நடைபெறும் பணபரிவர்த்தனைகளை கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் அலர்ட் சிஸ்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை. தேர்தல் தொடர்பாக, அனைத்து மாவட்ட மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், செலவின குழுவினருக்கான பயிற்சி மார்ச் மாதத்தில் தொடங்குகிறது” என தெரிவித்தார்.
**வினிதா**�,”