ஜேஇஇ மெயின் தேர்வு தள்ளிவைப்பு – தேசிய தேர்வு முகமை

Published On:

| By admin

ப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன், ஜூலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு நான்கு முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23ஆம் கல்வியாண்டில் இருந்து இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி இந்தாண்டுக்கான முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 முதல் மே 4ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மே 24 முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை முன்னர் அறிவித்திருந்தது. இதனிடையே முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை ஜேஇஇ முதன்மை தேர்வை இரண்டு மாதங்களுக்குத் தள்ளி வைத்துள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வு ஜூன், ஜூலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் எனவும், இரண்டாம் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share