கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தவர். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற அணிகளுக்காக பங்கேற்றார்.
தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை வந்துள்ளார். நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று(ஏப்ரல் 18) தனது 48ஆவது பிறந்த நாளை கொண்டாடிய முரளிதரன், நேற்றிரவு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, இயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு எதுவும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யும் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முரளிதரன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”முரளிதரன் வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாத இறுதியில் இதயத்தில் ஒரு அடைப்பு கண்டறியப்பட்டது. எனவே இது (ஆஞ்சியோ) நடத்தப்பட வேண்டிய ஒரு வழக்கமான செயல்முறையாகும். முரளிதான் நன்றாக இருக்கிறார்” என ஐபிஎல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
**வினிதா**
.�,