mபிரியாணிக்காக 1.5கிமீ காத்திருந்த மக்கள்!

Published On:

| By Balaji

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் இந்திய உணவு வகையாக இருக்கிறது பிரியாணி. இந்நிலையில், பிரியாணிக்காக அதிகாலை முதலே 1.5 கிமீ காத்திருந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூருவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இருப்பது ஹோஸ்கேட் நகரம். இங்குள்ள ஆனந்த் தம் கடையில் தயாரிக்கப்படும் பிரியாணி அப்பகுதி வட்டாரத்தில் மிகவும் சுவையானது. இதனால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படும். 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த பிரியாணி கடைக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இங்கு ஆயிரக்கிலோ கணக்கில் பிரியாணி தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, கடை அடைக்கப்பட்டு மீண்டும் கடந்த மூன்று வாரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை முதலே பிரியாணி பிரியர்கள் ஆனந்த் தம் கடை முன்பு குவியத் தொடங்கியுள்ளனர்.

6 மணி முதல் பிரியாணி விற்பனை தொடங்கும் என்பதால் காலை 4.30 மணி முதலே காரிலும், இரு சக்கர வாகனத்திலும் வந்து பிரியாணி பிரியர்கள் காத்திருந்தனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த சமயத்தில், சுமார் 1.5 கிமீ தூரத்துக்குப் பிரியாணிக்காகக் கூட்டம் நின்றுள்ளது.

இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Queue for biryani at Hoskote, Bangalore. Send by @ijasonjoseph
Tell me what biryani this is and is it free? pic.twitter.com/XnUOZJJd2c

— Kaveri ???????? (@ikaveri) September 26, 2020

இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஆனந்த் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் மீண்டும் கடந்த மூன்று வாரங்களிலேயே 20 சதவிகிதம் வருவாய் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், 6 மணிக்கே வாடிக்கையாளர்கள் வந்துவிடுவார்கள் என்பதால் இரவிலேயே சமையல் வேலையைத் தொடங்கிவிடுவோம், காலை விநியோகம் தொடங்கி ஒரு சில மணி நேரத்திலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும் என்று கூறும் அவர், எங்கள் கடை பிரியாணிக்காகவே சொந்தமாக ஆடு வளர்க்கிறோம், அதுபோன்று இயற்கையான பொருட்களையே பயன்படுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

**-கவி**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share