hகிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி பகாளாபாத்!

Published On:

| By Balaji

ஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து, அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் வியாதிகள் குணமாகும் என்கிறது யுனானி மருத்துவம். நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பதுடன், உடல் வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சி அடைய செய்யக் கூடியது என்ற விதத்திலும் ஜவ்வரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட ஜவ்வரிசியில் பகாளாபாத் செய்து இந்த நாளை சிறப்பாக்குங்கள்.

**என்ன தேவை?**

நைலான் ஜவ்வரிசி – 150 கிராம்

கெட்டித் தயிர் – ஒரு கப் (கடையவும்)

பெருங்காயத்தூள் – சிறிதளவு

கடுகு – அரை டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

மிளகு – 10

சீரகம் – கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

ஜவ்வரிசியைக் களைந்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வேகவிடவும். நன்றாக ஆறிய பின்னர் தயிர் சேர்த்துக் கிளறவும். நெய்யைச் சூடாக்கி கடுகு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். நன்கு கிளறிப் பரிமாறவும்.

கூடுதல் சுவைக்கு வறுத்த முந்திரி – திராட்சை, பொடியாக நறுக்கிய மாங்காய், மாதுளை முத்துகள், நறுக்கிய வெள்ளரிக்காய் சேர்க்கலாம்.

[நேற்றைய ரெசிப்பி: ஜவ்வரிசி வடை!](https://minnambalam.com/health/2021/01/12/1/javvarisi-vadai)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share