j7 போலீசார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

Published On:

| By Balaji

மாமல்லபுரம் காவல்நிலையம் முன்பு பார் உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் துறையினருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூலை 20) லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நெல்லையப்பன்(37). திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தார். திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கபெருமாள் கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுபானக்கடை பார்களை நெல்லையப்பன் நடத்தி வந்தார். தண்டலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரிடம், அவர் இந்த பார்களை மேல் வாடகைக்கு வாங்கியிருந்தார். பார்களை நடத்த அதிமுக பிரமுகருக்கு ரூ.19 கோடி கொடுத்துள்ளதாகவும், இதுதவிர காவல்துறையினருக்கு மாதம் மாதம் மாமூல் வழங்கியதாகவும் நெல்லையப்பன் தெரிவித்திருந்தார். இதனால் தொழிலில் நஷ்டமடைந்ததாக கூறி, நெல்லையப்பன் மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகம் முன்பு கடந்த மே மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, ஏ.டி.எஸ்.பி மாணிக்கவேல், மாமல்லபுரம் டி. எஸ்.பி சுப்புராஜு, காஞ்சிபுரம் ஆய்வாளர் ரவிச்சந்திரன், திருப்போரூர் ஆய்வாளர் கண்ணன், கேளம்பாக்கம் ஆய்வாளர் பாண்டி, மாமல்லபுரம் ஆய்வாளர் சிரஞ்சீவி மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட 7 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அதன்படி பாலவாக்கம் வேம்புலி அம்மன் கோயில் அருகில் இருக்கும் டி. எஸ்.பி சுப்புராஜு வீடு, மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஏ.டி.எஸ்.பி மாணிக்கவேல் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[ தமிழ் பேசினால் தமிழ்ப் படமா?](https://minnambalam.com/k/2019/07/20/20)**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share