ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க இருப்பதாகத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் கனவு ஆசிரியர் ஆகிய விருதுகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 4) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களையும், நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “ஆசிரியர் தினத்தன்று தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்குவதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அதில், தமிழகத்தில் 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கவிருக்கிறது. நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்குச் சான்றிதழும், ரூ.10,000 ரொக்கமும் வழங்கப்படும். அதோடு, புதுமைப் பள்ளி என்கிற பெயரில் தூய்மையான 40 பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், “இனி, பள்ளிகளுக்குச் செல்லாமலேயே நேரடியாக 8, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதலாம். அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு, ஜூலை மாதம் மட்டுமே மறுதேர்வு நடத்தப்படும். ஜூலையில் நடக்கும் மறுதேர்வில் தேர்ச்சி பெற்றால், அந்த வருடமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பைத் தொடரலாம்” என்று கூறினார்.�,”