Jஸ்ரீநாத்தை முந்திய இஷாந்த்

public

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று (ஆகஸ்ட் 30) தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, 250 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணி, டாஸ் வென்று பேட்டிங்கைத் துவக்கிய ஒருசில நிமிடங்களிலேயே அந்த அணியின் இரண்டாவது விக்கெட் கேப்டன் ஜோ ரூட்டின் வாயிலாக விழுந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய பந்தில் ஜோ ரூட், எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். ஆனால் அம்பயரின் தீர்ப்பை இங்கிலாந்து ரிவ்யூ செய்கையில், அது நோ-பால் என்று தெரிந்ததால் ரூட்டுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் இஷாந்த் ஷர்மா வீசிய இன்-ஸ்விங் பந்தை தவறாக கணித்த ஜோ ரூட், அதனை கால் பட்டையில் வாங்கி அவுட் ஆனார். இது இஷாந்த் ஷர்மாவின் கிரிக்கெட் பயணத்தில் 250ஆவது விக்கெட்டாகப் பதிவானது. மேலும், இங்கிலாந்துக்கு எதிராக இவரது 50ஆவது விக்கெட்டாகவும் பதிவானது.

இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது இஷாந்த் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 434 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் முதலிடத்திலும், 311 விக்கெட்டுகளுடன் ஜாகிர் கான் இரண்டாவது இடத்திலும், 250 விக்கெட்டுகளுடன் இஷாந்த் ஷர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக இந்தப் பட்டியலில் ஜவகல் ஸ்ரீநாத் உள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *