jஏ.ஆர்.முருகதாஸ்: ரஜினிக்கு அடுத்து யார்?

public

lதமிழ்த் திரையுலகிலிருந்து சென்ற ஒரு சில இயக்குநர்களே இந்தியத் திரையுலகம் முழுவதும் கவனம் பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிவரும் முருகதாஸ் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் சர்கார் படத்தை இயக்கினார். வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ரஜினிகாந்தைக் கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கதாநாயகனாகக் கொண்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கு முன்னதாக தெலுங்கில் சீரஞ்சீவியைக் கதாநாயகனாகக் கொண்டு ஸ்டாலின் படத்தை இயக்கினார். அங்கு நல்ல வரவேற்பு பெற்ற அந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 2017ஆம் ஆண்டு மகேஷ் பாபுவைக் கதாநாயகனாகக் கொண்டு ஸ்பைடர் படத்தைத் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருந்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *