இந்திய அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நல்ல வளர்ச்சியை அளித்துள்ளது என்று சோழமண்டலம் எம்.எஸ். பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.கோபாலரத்தினம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிசினஸ் லைன் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த நிதியாண்டின் (2017-18) முதல் அரையாண்டில் நாங்கள் 46 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளோம். மேலும், பயிர்க் காப்பீட்டு திட்டமான பிரதான் மந்திரி பசல் பைமா யோஜனா (பி.எம்.எஃப்.பி.ஒய்.) திட்டத்தில் இந்த நிதியாண்டில் பிரீமியம் தொகை ரூ.30,000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2016-17ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தில் பிரீமியம் தொகையின் மதிப்பு ரூ.21,000 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டான 2015-16ஆம் நிதியாண்டில் பிரீமியம் தொகையின் மதிப்பு ரூ.6000 கோடியாக மட்டுமே இருந்தது. நாங்கள் பயிர்க் காப்பீட்டுத் துறையில் 180 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளோம். கடந்த ஆண்டில் 143 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருந்தோம்” என்று கூறியுள்ளார்.�,”