l
குறைவான வருவாயை ஈட்டித்தரும் பொருட்கள் மீதான வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 21ஆம் தேதியன்று நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சானிட்டரி நாப்கின், கைவினைப் பொருட்கள், கைத்தறி நெசவுத் தயாரிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சில சேவைகளுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரம் தொடர்பான பொருட்கள், அமைப்புசாரா துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்கள் மீதான வரியைக் குறைக்குமாறு தொழில் துறை அமைப்புகளும், பங்குதாரர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பங்குதாரர்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகளின் அடிப்படையில், வரி விகிதங்களை மாற்றியமைக்கும் விவகாரம் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசிக்கும். பொதுப் பயன்பாட்டில் உள்ள பொருட்கள் மற்றும் குறைவான வருவாய் தரும் பொருட்கள் மீது ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய கவனம் செலுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
கைத்தறி நெசவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், சானிட்டரி நாப்கின்களுக்கு தற்போது 12 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்க தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே இப்பொருட்களுக்கான வரி விகிதங்கள் ஜூலை 21ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,