பெட்ரோல், டீசல் மற்றும் மானிய காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிவாயு ஆகியவற்றின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மாதத்துக்கு இரண்டு முறை என்ற அளவில் உயர்த்தி வருகின்றன. அதன்படி, நேற்று நள்ளிரவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 29 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மானியத்தில் வழங்கும் மண்ணெணெய் விலை மற்றும் விமான எரிபொருளுக்கான விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, மானிய மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.19.43க்கு விற்பனையாகிறது. அதேபோல, விமான எரிபொருள் விலை 8.6 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, 1000லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.52,540.63 ஆக உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.�,