jபாலியல் புகார் : பாஜக தலைவர்கள் கருத்து!

public

அடுக்கடுக்கான பாலியல் குற்றசாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் மேகாலய ஆளுநர் வி.சண்முகநாதன். மேலும் இவர் மீது எழுப்பப்பட்ட புகார் குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர் மீது எழுப்பப்பட்ட புகார்கள் அனைத்தும் அரசியல் நோக்கத்துடன் எழுப்பப்பட்டதாக தமிழக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

**மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்**

கடந்த 35 வருடங்களாக என்னுடன் நட்பில் இருப்பவர். இவர் யாரையும் பாலியல்ரீதியாக துன்புறுத்த மாட்டார். இவர், தனது குழந்தைப்பருவம் முதல் ஆன்மிகத்தில் மிகவும் தீவிர ஈடுபாடு கூடியவர். இவர் கோயில்களில் பல மணி நேரங்களைச் செலவிட்டு வந்தவர். இவர், டெல்லியில் வசித்துவந்தபோது நான் அவர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு அவர் ஒரு ஆன்மிக வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். கட்சித் தொண்டர்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடம் மட்டுமே தொடர்புகொண்டவராக இருந்தவர், என்றார்.

**பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா**

சண்முகநாதன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் 30 வருடங்களும், பாஜக-வில் 15 வருடங்களும் பணியாற்றியவர். இவர் பணியாற்றிய இந்த காலகட்டத்தில், இவர்மீது எந்தவிதப் புகார்களும் எழுந்ததில்லை. ஆர்.எஸ்.எஸ்.இல் இதுபோன்ற புகார்களுடையவர்கள் நீண்டகாலம் இயக்கத்தில் நிலைத்திருக்க முடியாது. தற்போது, இவர்மீது எழுப்பப்பட்ட புகாரில்கூட அவரின் ஒழுக்கத்தைப் பற்றி குற்றம்சாட்டவில்லை. அவர் ஊழியர்களிடம் முரட்டுத்தனமாகச் செயல்பட்டார் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுகூட பொய்யான குற்றச்சாட்டுகள்தான். அவர் எப்போதும் மற்றவர்களிடம் மென்மையாக பேசக்கூடியவர் ஆவார், என்றார்.

**தமிழக பாஜக துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்**

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் பாசறையான ஏ.பி.வி.பி-யில் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் இருந்து வி.சண்முகநாத்துடன் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் என்னுடைய நண்பர்களும் இவருடன் பலமுறை கரைந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம், அவரிடம் நாங்கள் எந்தப் புகாரையும் கண்டுபிடிக்கவில்லை. இவர் மீது வேண்டுமென்றே புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன, என்றார்.

மேகாலயா ஆளுநரான வி.சண்முகநாதன், தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவராவார். கடந்த 1962ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து, பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவரை, கடந்த 2015ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக மத்தியில் உள்ள மோடி அரசு நியமித்தது. தற்போது இவர், அருணாச்சலபிரதேசம் மாநிலத்தின் கூடுதல் ஆளுநராகவும் செயல்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பதவி விலகுவதுக்கான காரணம் [பெண் சர்ச்சை: கவர்னர் ராஜினாமா!](https://minnambalam.com/k/1485501692 )�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *