jபருப்பு விநியோகத்துக்கு அரசு ஒப்புதல்!

Published On:

| By Balaji

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு வகைகளை மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில அரசுகளின் பொது விநியோகத் திட்டங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டங்களுக்கு மானிய விலையில் ஒன்றிய அரசு பருப்பு வகைகளை விநியோகம் செய்து வருகிறது. தற்போது காரிஃப் பருவம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த பருவத்துக்கான கொள்முதலுக்காக, கிடங்குகளைத் தயார்படுத்த வேண்டிய நிலை இருப்பதால், தற்போது கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 34.8 லட்சம் டன் அளவிலான துவரை, சன்னா, மசூர், பாசிப் பருப்பு மற்றும் உளுந்து வகைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய் மானிய விலையில் இவற்றை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பருப்பு வகைகள் மதிய உணவுத் திட்டம், பொது விநியோகத் திட்டம் ஆகியவை மட்டுமின்றி ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்ற பலவற்றுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த 34.88 லட்சம் டன் பருப்பும் அடுத்த 12 மாதங்களில் படிப்படியாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு பிரித்தளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.5,237 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share