jட்விட்டரில் சண்டையிடும் ஐபிஎல் அணிகள்!

Published On:

| By Balaji

ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகள் தற்போது ட்விட்டரில் போட்டிபோட்டுக் கொண்டு ட்வீட் செய்து வருகின்றன.

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி நிறைவடையும் நிலையில் இதற்கான வீரர்கள் பரிமாற்றம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் ஐபிஎல்லின் முன்னணி அணிகளாக வலம்வரும் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ட்விட்டரில் போட்டிபோட்டுக் கொண்டு ட்வீட் செய்து வருகின்றன.

மூன்று முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சண்டையை முதலில் தொடங்கியது. அந்த அணியின் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, கெய்ரன் போலார்டு, க்ருனல் பாண்டியா ஆகியோரது செல்ஃபி ஒன்றை ட்விட்டரில் பதிவுசெய்து, “இவர்களைவிட சிறந்த ஆல்ரவுண்டர்கள் உலகில் இருந்தால் அடையாளம் காட்டுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டிருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அந்த அணியைச் சேர்ந்த ஷகிப் அல் ஹசன், முகமது நபி, ரஷீத் கான் ஆகியோரது செல்ஃபி ஒன்றைப் பதிவிட்டு, “நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை” என்று கூறியது.

இந்தச் சண்டையில் கடைசியாக இணைந்தது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ். மகேந்திர சிங் தோனியின் பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அத்துடன் “மூன்று முகம், தல தோனி” என்று பதிவிட்டிருந்தது. அந்த போஸ்டரில் மூன்று தோனி இருப்பது போன்று டிசைன் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக ஸ்பைடர் மேன், ஹல்க், அயர்ன் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி, “சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஹிட்மேன் மூவரும் உங்களை இழந்துவிட்டார்கள்” என்று பதிவிட்டிருந்தது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share