jஜப்பானிடம் வாங்கும் புல்லெட் ரயில்கள்!

ரூ.7,000 கோடி மதிப்பிலான 18 புல்லெட் ரயில்களை ஜப்பான் நாட்டிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லெட் ரயிலை 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர இந்திய அரசு முயற்சித்து வருகிறது. மும்பை முதல் அகமதாபாத் வரையில் 508 கிலோ மீட்டர் தொலைவுக்கான புல்லெட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை ஜப்பான் இந்தியாவுக்கு வழங்கி வருகிறது. இந்த ரயில் செயல்பாட்டுக்கு வந்தால் 18,000 பேர் வரையில் இதில் பயணிப்பார்கள் எனவும், அதன் டிக்கெட் கட்டணம் ரூ.3,000 வரையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுதவிர, விமானங்களைப் போலவே பல்வேறு வசதிகள் அடங்கிய முதல் தர பெட்டிகள் இதில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மேலும் 18 புல்லெட் ரயில்களை ஜப்பான் நாட்டிடமிருந்து ரூ.7,000 கோடிக்கு இந்தியா வாங்கவுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 18 பெட்டிகள் இருக்கும் என்பதோடு, இந்த ரயில்கள் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவையாகவும் இருக்கும். ஜப்பானிடம் புல்லெட் ரயில்களை வாங்குவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே அசெம்பிளிங் ஆலை ஒன்றும் அமைக்கப்படுகிறது. *மேக் இன் இந்தியா* திட்டத்தின் கீழ் இங்கு ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த ஆலை அமைப்பதற்கான நிலத்தை 2018ஆம் ஆண்டின் இறுதிக்குள் கையகப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts