சமந்தாவின் அடுத்த தெலுங்கு படமான ராஜு காரி காதி 2 – ல் அவர் இதுவரை தான் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். “சிறிய கதாபாத்திரம் என்றாலும் மனதில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கதாபாத்திரமாக இருக்கும்” என்று டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சுச்சி லீக்ஸ் சர்ச்சை தமிழ் திரையுலகில் சில மாதங்களுக்கு முன் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து தமிழ் திரையுலகின் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வெளியானது. இந்த சர்ச்சையை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார். **“சமூக வலைதளங்களில் வெளியான லீக்ஸ் சர்ச்சை பற்றி உங்களுக்கு தெரியும். எனது கதாபாத்திரம் அந்த வீடியோவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக நெருக்கமானது. அந்த வீடியோவை பரப்பிய, பார்த்த, சிரித்த அத்தனை பேருக்கும் எனது கதாபாத்திரம் கருத்து கூறும்”** என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் உருக்கமான காட்சிகளுக்கு கிளிசரின் உபயோகிக்காமல் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். **“இந்த கதாபாத்திரத்திற்காக உருக்கமான காட்சிகளில் கிளிசரினே உபயோகிக்கவில்லை. கண்ணீர் இயல்பாகவே வந்தது”** என தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது திருமணம் குறித்து பேசிய அவர், **“இது எனது எட்டு வருட நட்பு. எனது சிறந்த நண்பனை மணமுடித்துள்ளேன். நான் இப்போதிருந்து ‘சமந்தா அக்கினேனி’. குடும்பத்தின் புகழ் மற்றும் மரபை உணர்ந்து செயல்படுவேன்”** என்று தெரிவித்துள்ளார்.�,