சமந்தா அக்கினேனி நடிப்பில் வெளியான ஓ பேபி திரைப்படம் சீனாவில் திரையிட மும்முரமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
சூப்பர் டீலக்ஸ் படத்தின் வரவேற்புக்குப் பின் தெலுங்கில் சமந்தா நடித்த படம் மஜிலி. சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவும் இணைந்து நடித்த இப்படம் சமீபத்தில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது. அதன் வெற்றியைத் தொடர்ந்து நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா பிரதான கதாபாத்திரத்தில் நடித்த படமே ஓ பேபி. ஃபேண்டசி காமெடியான இப்படம் தென் கொரியத் திரைப்படமான *மிஸ் கிராணி*யின் தழுவல் ஆகும். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
70 வயது மதிக்கத்தக்க பாட்டி குடும்பத்தினரின் அன்பு கிடைக்காமல் தனிமையில் வாடுகிறார். ஒரு நாள் போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் பாட்டி, கேமரா பிளாஷ் அடித்ததும் மந்திர சக்தி மூலம் 24 வயது இளம் பெண்ணாக மாறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் கூறும் படமே ஓ பேபி. வயதான தோற்றத்தில் பழம்பெறும் நடிகை லட்சுமியும், இளமையான தோற்றத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம், தெலுங்கு, தமிழ் என இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சீனாவிலும் ஓ பேபி படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.
படத்தை இணைந்து தயாரித்த விவேக், சுனிதா ஆகியோர் படத்தின் வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களிடம், ‘படத்தை சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே சீன ரசிகர்கள் இப்படத்தை பார்த்திருந்தாலும், சமந்தாவின் நடிப்பிற்காகவும், இந்திய கதை சொல்லும் முறையை பார்ப்பதற்காகவும் சீன ரசிகர்கள் விரும்புகின்றனர். அதனாலேயே ஒரு சீன விநியோக நிறுவனம் ஓ பேபி படத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
ஓ பேபி படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான மிஸ் கிராணி சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் ரீமேக்காகி ஹிட்டடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. முதுமையிலிருந்து இளமைக்குத் திரும்பும் பாட்டியின் கதை, குறிப்பாக ஆசிய நாடுகளில் ரீமேக்காகி அனைத்துமே வெற்றி பெற்றுள்ளது ஆச்சர்யமளிக்கிறது. இதன் சுவாரஸ்யமான கதை அனைவரையும் இணைத்துள்ளதை கவனிக்கும் போது, ஆசிய மக்களின் ரசனையும், உணர்ச்சிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது தெளிவாகிறது.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”