ஒரு கப் காபி
மாபெரும் விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்பதற்குத் தீவிரமான பயிற்சிகள் செய்வார்கள். பளு தூக்குவார்கள். உடற்பயிற்சி செய்வார்கள். வலியை அனுபவிப்பார்கள். வியர்வை சிந்துவார்கள். சில வேளைகளில் கண்ணீரும் சிந்துவார்கள். ஆனால் வெற்றிக்கான அவர்களது வேட்கை அவர்களை வழிநடத்தும். வலி, காயங்கள், பின்னடைவுகள், சிக்கல்கள் ஆகிய எத்தனைதான் வந்தாலும் அவர்கள் தொடர்ந்து கடினமான பயிற்சிகளைச் செய்துகொண்டேயிருப்பார்கள். இவை அனைத்தும் உடலையும் மனதையும் போட்டிக்கு ஏற்பப் பக்குவப்படுத்தும் செயல்முறைகள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
அது போலவே நானும் வாழ்க்கையின் சுமைகளுடன் உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் பல ஆண்டுகள் போராடியுள்ளேன். உங்களுக்குத் தெரியுமா? நான் பட்ட கஷ்டம் ஒவ்வொன்றுக்கும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். இந்த அனுபவங்கள்தான் என் வாழ்வை வடிவமைத்திருக்கின்றன. இன்று நான் திறமையுள்ளவனாகவும் வெற்றியாளனாகவும் விளங்குவதற்கு இவைதாம் காரணம். என்னுடைய அனுபவம் எதையும் இந்த உலகத்துக்காக நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
சாம்பியன்களின் பயிற்சிகள் மற்றவர்கள் செய்யும் பயிற்சிகளைவிடத் தீவிரமானதாக இருக்கும். என்னுடைய பயிற்சிகளும் அப்படித்தான். நான் ஒரு சாம்பியன். அதற்குக் காரணம் என் வாழ்வின் சுமைகளால் உணர்வு ரீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு ஏற்பட்ட வளர்ச்சிதான். அதுதான் என்னை இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கான வழி அதை அனுபவித்து மீண்டுவருவதுதான்.
நீங்கள் எங்கே செல்ல இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தற்போது இருக்கும் இடம் தீர்மானிக்கப் போவதில்லை.
**- ஜானி டி. விம்ப்ரே**
நன்றி: From the HOOD To doing GOOD (தீரட்டும் வேதனை மலரட்டும் சாதனை) என்னும் நூலிலிருந்து. வெளியீடு: சக்சஸ் ஞான்
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)
**
**
[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
�,”