சீன நிறுவனமான கூல்பேட்(coolpad) தன்னுடைய அடுத்த படைப்பான கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பிரத்யேகமாக அறிமுகம் கண்ட கூல்பேட் நோட் 6 நேற்று(மே 1ஆம் தேதி) முதல் இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்களில் இருக்கும் 300 மல்டி பிராண்ட் ஷோரூம்களில் கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். பொதுவாக புதிய மாடல் ஃபோன்கள் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் தான் முதலில் வெளியாகும். ஆனால் கூல்பேட் நோட் 6 அவைகளிலிருந்து சற்று வேறுபட்டு ஷோரூம்களில் அறிமுகமாகியுள்ளது.
கூல்பேட் நோட் 6 கோல்டு மற்றும் கிரே(Grey) என இரு நிறங்களிலும் 32 ஜிபி மற்றும் 64ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும். 32 ஜிபி இடவசதியைக் கொண்ட மாடல் 8,999 ரூபாய்க்கும், 64ஜிபி மாடல் 9,999 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
5.5 இன்ச் கொண்ட HD டிஸ்ப்ளே கொண்ட கூல்பேட் நோட் 6, அண்ட்ராய்டு 7.1 நகட் os மற்றும் Octa-core குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 435 மூலம் இயங்கக்கூடியது. இதன் 4 ஜிபி RAM அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி எடுப்பதற்காக பிரத்தியேகமாக இரட்டை கேமரா(8 மெகாபிக்செல் மற்றும் 5 மெகாபிக்செலில்) 120 டிகிரி, wide lens கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின் கேமரா 13 மெகாபிக்செலில் Auto Focus தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் செல்பி பிரியர்களை இது மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்ஃபோனில் ஒருமுறை சார்ஜ் செய்வதன் முலம் 350 மணிநேரம் தடையின்றி இயங்கும்.
இந்த ஸ்மார்ட்போனை பற்றி கூல்பேட் நிறுவனத்தின் சிஇஒ(CEO) சையத் தாஜுதீன் (syed tajuddin) கூறுகையில் “கூல்பாத் நோட் 6 இந்திய வாடிக்கையாளர்களின் பணத்திற்கு பெரிய மதிப்பு வழங்கும். நாங்கள் அடுத்த சில மாதங்களில் மேலும் தீவிரமான ஆஃப்லைன் சாதனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
�,”