ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகள் குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
2019 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 92.5 லட்சம் டெபிட் கார்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன. அதற்கு முந்தைய ஐந்து மாதங்களில் மட்டும் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 7.3 கோடி வரையில் குறைந்துள்ளது. அதேபோல, 2018 மார்ச் மாதம் முதல் 2019 மார்ச் மாதம் வரையில் புதிதாக 6.4 கோடி டெபிட் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 2017 – 18 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 11.6 கோடியாக இருந்தது.
2018 அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 99.8 கோடி டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் இருந்த நிலையில், அதைத் தொடர்ந்து டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகள் சென்ற ஆண்டில் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளை நிறுத்தியதின் விளைவாகவே இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த விவரங்களின் படி, 2017 ஏப்ரல் 1 முதல் 2018 ஜனவரி 31 வரையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சுமார் 41.16 லட்சம் சேமிப்புக் கணக்குகளை மூடியுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)
**
.
**
[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)
**
.
.
�,”