சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தங்களுக்குப் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் அமிலவீச்சில் காயமடைந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை நெற்குன்றம் அருகேயுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில், கன்னியப்பன் என்பவர் தனது மனைவி மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். நகைப் பட்டறையொன்றில் கன்னியப்பன் பணியாற்றி வந்தார். அந்த குடியிருப்பின் வேறொரு தளத்தில் கோயம்பேடு சந்தையில் பணிபுரியும் அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், வேல்முருகன், வீரசுவாமி, அசோக், வேல்முருகன், இன்னொரு வேல்முருகன் ஆகிய 8 பேர் வாடகைக்கு தங்கி இருந்தனர். கடந்த 19ஆம் தேதியன்று, விடுமுறையில் என்பதால் அந்த 8 பேரும் மது அருந்தினர். குடிபோதையில் அந்த பகுதியே நடுங்கும் வகையில் கத்திக் கூச்சலிட்டனர். இதனால் எரிச்சலடைந்த கன்னியப்பனின் மனைவியும், அவரது சகோதரரும், இது பற்றி அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அந்த நபர்கள் அவர்கள் இருவரையும் தாக்கிக் காயப்படுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பன், நகைகளைக் கழுவும் அமிலத்தை எடுத்துவந்து 8 பேர் மீதும் விசிறினார். அமில வீச்சில் காயம்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் இதன் தொடர்ச்சியாக, கன்னியப்பனை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று தெரிய வந்தது.
இன்று (மே 27) அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்று புகார் அளித்தனர். காயங்கள் ஆறாத நிலையில், 4 நாட்கள் மட்டுமே சிகிச்சை அளித்துத் தங்களை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம்சாட்டினர்.
இதற்குப் பதிலளித்துள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம், காயங்கள் முழுமையாகக் குணமடையும் வரை எல்லா நோயாளிகளையும் மருத்துவமனையில் வைத்திருக்க முடியாது என்றும், அதற்கு இட வசதி இல்லை என்றும், மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் மீண்டும் வந்து அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)
**
.
**
[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)
**
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)
**
.
.�,”