நடப்பு ஐ.பி.எல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெற்ற சுவாரஸ்யமான போட்டியில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனால் குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித் – இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு குஜராத் அணியின் விக்கெட்களை வீழ்த்தினர். தொடக்க வீரர் ஸ்மித் மற்றும் கேப்டன் ரெய்னா குறைவான ரன்களில் ஆட்டமிழக்க மோசமான நிலையில் குஜராத் அணி இருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷாந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் நிதானாமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன் பின் இஷான் கிஷந்த் விக்கெட்டினை பறிகொடுக்க பின்ச் களமிறங்கினார். அவர் அதிரடியில் குஜராத் அணியின் ஸ்கோர் அதிகரித்தது. 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான எஸ்.வி. சாம்சன், நாயர் குறைந்த ரன்களில் வெளியேறினர். ஆனால் டெல்லி அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட வெஸ்ட் இந்தியன்ஸ் வீரர் பிரத்வொய்ட் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் விரைவில் வெளியேறி டெல்லி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்து நின்று விளையாடிய ஐயர் 57 பந்துகளில் 96 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் டெல்லி அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
போட்டி நடைபெறும் போது இடையே ஒரு ரசிகர் மைதானத்திற்கு உள்ளே வந்து சுரேஷ் ரெய்னாவிடம் ஆட்டோகிராப் கேட்ட நிகழ்வு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
�,”