Jஎழுத்தாளராக வலம்வரும் ஜனனி

Published On:

| By Balaji

தமிழ், மலையாளம் திரையுலகில் பல படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படம்தான் ஜனனி ஐயருக்கு முக்கியமான படமாக அமைந்தது. பேபி என்ற காவலர் வேடத்தில் அவர் நடித்தது மிகவும் பிரபலமானது. தற்போது இவர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்துவருகிறார்.

சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஜனனியின் கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தற்போது அதை வெளிப்படுத்தியுள்ளார். “துணிச்சலான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். திரைக்கதையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக அமைந்துள்ளது. 80 சதவீதம் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். இன்னும் சில நாள்களுக்கான படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். கோயம்புத்தூர், ஊட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. பாடல்காட்சியும் படமாக்கப்படவுள்ளது.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா மேனன் மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ளார். படம் குறித்து இயக்குநர் சந்தீப்,“பல்வேறு சூழலில், உணர்வுநிலையில் மனித மூளை செயல்பாடுகளில் உள்ள பிரச்சினைகளைப் பேசுவதாக திரைக்கதை அமைந்துள்ளது. காதல், வெறுப்பு, அமைதி, கொலை என பல விஷயங்கள் படத்தில் உள்ளன. அசோக் செல்வன் இருவித தோற்றங்களில் நடிக்கிறார். இரு வெவ்வேறு காலகட்டங்களில் படம் நகரும். இந்தப் படத்தை கேசவர்தனன் தயாரிக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share