இந்தியாவிலேயே தமிழகம்தான் உடலுறுப்பு தானத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி சென்னையில் உடலுறுப்பு தானம் பற்றிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர்,
“தமிழகம் உடலுறுப்பு தானத்தில் மிகச் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இதற்காக பாராட்டு தெரிவித்த தமிழக ஆளுநர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தமிழகத்தில் உடல்தானம் பற்றிய விழிப்பு உணர்வு நாட்டிலேயே அதிகமாக இருக்கிறது. கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வினை மேலும் அதிகரிக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்து நடத்தும்’’ என்று குறிப்பிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்.�,