jஇரண்டாவது மிகப்பெரிய நகரமாகுமா சென்னை?

Published On:

| By Balaji

முன்மொழியப்பட்ட விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தால் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக சென்னை உருவெடுக்கும் என்று ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூர் கொள்கை ஆய்வுக் கழகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் முழுவதுமாகவும், வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாக்களைச் சேர்ந்த சில பகுதிகளையும் இணைத்தால் சென்னையின் பரப்பளவு ஏழு மடங்கு உயர்ந்து 8,878 சதுர கிலோமீட்டராக உயரும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னையை மெகா நகரமாக உருமாற்றுவதற்கு தமிழக அரசு முன்மொழிந்து, சில மாதங்களுக்குப் பிறகு அதை அறிவித்துவிட்டது. “முன்மொழியப்பட்ட படி சென்னை விரிவாக்கம் செய்யப்பட்டால், சென்னையை விட தேசிய தலைநகர் மண்டலம் மட்டுமே பெரிய பகுதியாக இருக்கும்” என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

தேசிய தலைநகர் மண்டலம் என்பது டெல்லி, நொய்டா, குருக்ராம் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியாகும். தேசிய தலைநகர் மண்டலத்தின் ஒட்டுமொத்த பரப்பளவு 53,817 சதுர கிலோமீட்டராகும். தற்போது சென்னையின் பரப்பளவு 1,189 சதுர கிலோமீட்டராகவும், மும்பையின் பரப்பளவு 4,354 சதுர கிலோமீட்டராகவும், ஹைதராபாத்தின் பரப்பளவு 7,100 சதுர கிலோமீட்டராகவும், பெங்களூருவின் பரப்பளவு 8,005 சதுர கிலோமீட்டராகவும் இருக்கிறது. வெறும் 426 சதுர கிலோமீட்டராக இருந்த சென்னையின் பரப்பளவு 1975ஆம் ஆண்டில் நான்கு மடங்கு உயர்ந்து 1,189 சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share