jஇயக்குநர் கவுதமனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Published On:

| By Balaji

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர் கவுதமனை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் செய்த மத்திய அரசைக் கண்டித்து கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக, ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 10ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டம் கலவரமாக மாறியது.

பின்னர் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக திருமுருகன் காந்தி, இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் இயக்குநர் கவுதமன் மீது திருவல்லிக்கேணி போலீசார் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன்படி போலீசார் கடந்த 24ம் தேதி சூளைமேடு வீட்டில் இருந்த கவுதமனை வீடு புகுந்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே தான் கைது செய்யப்பட்டதாக கவுதமன் தெரிவித்திருந்தார்.

மேலும், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கவுதமன் மனு தாக்கல் செய்திருந்தார். கவுதமன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை ஜாமீனில் விடுவிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து கவுதமனின் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுதமன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை இன்று (ஜூலை 12) விசாரித்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, அரியலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கவுதமனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share