போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வி போல இருக்கிறது இல்லையா? அவர் வேறு யாருமில்லை, ரஸ்கின் பாண்ட். பலரின் குழந்தைப்பருவங்கள் முழுவதும் இவருடைய கதைகளால்தான் நிறைந்துள்ளன. 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், குழந்தைகளின் புத்தகங்கள், சுயசரியதை என்று தொடர்ந்து எழுதிவருகிறார் பாண்ட்.
எடித் க்ளார்க் மற்றும் ஆப்ரே பாண்ட் தம்பதியருக்கு மகனாக பிறந்த ரஸ்கின் பாண்ட், தனது நான்கு வயதில், பெற்றோர் விவாகரத்து காரணமாக அப்பாவுடன் இருந்தார். மலேரியா காரணமாக அப்பாவின் மரணத்திற்குப் பிறகு, டெராடூனில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்குள்ள மலைகளையும், இயற்கைக் காட்சிகளையும் ரஸ்கின் பாண்ட் கதைகள் முழுவதும் நாம் காண முடியும்.
ஷிம்லாவில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, இங்கிலாந்திற்கு மேற்படிப்பிற்காகச் சென்ற பாண்ட், தன்னுடைய முதல் நாவலான The Room on the Roofஐ தன்னுடைய 21ஆம் வயதில் வெளியிட்டார். படிப்பை முடித்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்பிய பாண்டின் வாழ்க்கை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. தன்னுடைய கதைகள் பிரசுரமாகி, அதில் இருந்து கிடைக்கும் வருமானத்திலேயே வாழ்ந்துவந்தார். ஒரு மாதத்திற்கு குறைந்தது 10 கதைகளை எழுதி இருக்கிறார். ஒரு கதைக்கு ₹30-50 மட்டுமே அன்றைய விலையாக இருந்திருக்கிறது!
பாண்ட், அவருடைய 16 வயதில் முதல் சிறுகதையை எழுதினார். ஜான் லெவெல்லின் ரைஸ் விருது, சாகித்ய அகாதமி விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், வாழ்நாள் சாதனை விருது ஆகிய விருதுகளைப் பெற்ற 85 வயதாகும் ரஸ்கின் பாண்ட், தன்னுடைய வளர்ப்பு மகனின் குடும்பத்துடன் டெராடூனில் வசித்து வருகிறார். இன்றும், தன்னுடைய எழுத்தின்மூலம் உலகைக் கவர்ந்துவரும் நம் ரஸ்கின் பாண்டிற்கு இன்று பிறந்தநாள்!
– **ஆசிஃபா**
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)
**
.
**
[பாஜக ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/8)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
�,”