jஆம்புலன்ஸ் வராததால் இருவர் உயிரிழப்பு!

public

ராமேஸ்வரம் அருகே விபத்தில் சிக்கிய இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, 108 ஆம்புலன்ஸ் வராததன் காரணமாகப் பலியாகியுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற பொது மக்கள் நேற்று (ஏப்ரல் 21) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தேவிபட்டினம் சாலையில் ஆர்.காவலூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ஆனந்த் என்ற 13 வயது சிறுவனும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுவன் ஆனந்த் மற்றும் சுரேஷ் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் அளித்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்தார். பின்னர் சிறுவனை அருகில் இருந்த தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றபோது, அங்கு துப்புரவுப் பணியாளர் மட்டுமே இருந்துள்ளார்.

பின்னர் வந்த மருத்துவர் சிறுவன் ஆனந்த்தை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆலோசனை அளித்தார். அதன்படி, சிறுவனை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆனால், வழியிலே சிறுவனும் உயிரிழந்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மறியலைக் கைவிட்ட போராட்டக்காரர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பூட்டு போட்டுத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இருவர் உயிரிழந்த பின்பு கடைசியாக வந்த ஆம்புலன்ஸை போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *