Jஆடை: சுசீலாவின் பக்தி பாடல்!

Published On:

| By Balaji

அமலா பாலின் ஆடை படத்துக்காக பி.சுசீலா பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேயாத மான் படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் படம் ஆடை. அமலா பால் பிரதான பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள த்ரில்லர் ஜானர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் காமினி என்னும் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லரைப் பார்க்கும்போது வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக ஆடை இருக்கும் என எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. அதே நேரத்தில் ஆடையில்லாமல் நடித்த அமலா பாலின் டீசர் காட்சிகள் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆடை படத்திலிருந்து ஏற்கெனவே வெளியான ஒண்ணுமில்ல, நீ வானவில்லா ஆகிய பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து பழம்பெரும் பாடகி பி.சுசீலா ஆடை படத்துக்காக பாடிய பாடல் நேற்று (ஜூலை 15) வெளியாகியுள்ளது. கே.வீரமணி இசையில் பி.சுசீலா பாடிய *ரக்‌ஷ ரக்‌ஷ ஜகன் மாதா* என்ற பிரபலமான பக்திப் பாடல் மெட்டாலிக் ராக் வெர்ஷனில் ஆடைக்காக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வீரமணி இசையில் பட்டிதொட்டியெல்லாம் சென்றடைந்த இந்தப் பக்திப் பாடல் கேட்காத கோயில் திருவிழாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக, பெண்களுக்கு மனப்பாடமாய் ஒப்பிக்கும் அளவுக்கு மனத்தில் ஊறிய இந்தப் பாடல் பிரதீப் குமார் இசையில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் புதுமையான அனுபவத்தைக் கொடுக்கிறது. ஆல்பத்தின் ஹிட் பாடலாக இந்தப் பாடல் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளது.

அமலா பால், ரம்யா சுப்பிரமணியன், ஆதிராஜ், விவேக் பிரசன்னா, ரோஹித் நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜூலை 19ஆம் தேதி ஆடை திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

[ரக்‌ஷ ரக்‌ஷ ஜகன் மாதா](https://www.youtube.com/watch?v=MTGcRRNJe6U)

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share