jஅமலா பால் ரூட்டில் குறுக்கிட்ட விக்ரம்

Published On:

| By Balaji

மேயாத மான் படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் படம் ஆடை. அமலா பால் காமினி எனும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அமலாபாலுடன் இணைந்து, ரம்யா சுப்பிரமணியன், ஆதிராஜ், விவேக் பிரசன்னா, ரோஹித் நந்தகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் தொடக்கத்தில் எவ்வித வியாபார முக்கியத்துவமற்ற படமாக விநியோகஸ்தர்களால் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. இப்படத்திற்காக அமலா பால் பங்கேற்ற போட்டோ ஷூட்டில் கிழிந்த அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படம் வெளியான பின் ஆடை படம் விநியோகஸ்தர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

சமீபத்தில் வெளியான ஆடையில்லாமல் நடித்த அமலா பாலின் டீசர் காட்சிகள் சமூக வலைதளத்தில் விவாத பொருளானது. இதனால் சினிமா விநியோகஸ்தர்கள் மத்தியில் ஆடை படத்தை வாங்கும்ஆர்வத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வெளியான தமிழ்ப் படங்களில் யோகி பாபு நடித்த தர்ம பிரபு படம் மட்டுமே அவுட்ரேட் முறையில் வியாபாரம் ஆனது. அதே சூழல் ஆடை படத்திற்கும் ஏற்பட்டது. சுமார் 3 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள ஆடை படத்தின் கோவை, மதுரை ஏரியா விநியோக உரிமை மட்டும் 1.20 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகியுள்ளது.

இதற்கிடையில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் ஜூலை 19 வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் ஆடை படத்தின் வியாபாரம் மந்தமாகிவிட்டது.

கடாரம் கொண்டான் படத்தை திரையிட வட ஆற்காடு, தென்னாற்காடு, சேலம், மதுரை, திருச்சி ஏரியாக்களில் உள்ள 60% முக்கிய திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டன.

இதனால் ஆடை படத்தை திரையிட சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை ஏரியாக்களில் மால் தியேட்டர்களில் மட்டுமே திரைகள் கிடைக்கும் என்பதால் விநியோகஸ்தர்களுக்கான வருவாய் குறைவாகவே கிடைக்கும்

அதனால் ஏற்கனவே வியாபாரம் முடிந்த கோவை – மதுரை ஏரியா தவிர்த்து பிற ஏரியா உரிமைகளை அவுட்ரேட் முறையில் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர் விநியோகஸ்தர்கள்.

ஒரு புகைப்படமும், டிரெய்லரும் ஆடை படத்தின் வியாபாரத்தை வேகப்படுத்தியது. கடாரம் கொண்டான் ரிலீஸ் அறிவிப்பு அந்த வேகத்திற்கு தடை போட்டுள்ளது. வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படமும் ஜூலை 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share