jஃபோர்ப்ஸ்: சல்மான் உள்ளே, ஷாருக் வெளியே!

Published On:

| By Balaji

உலக சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த இரண்டு நடிகர்கள் இடம்பிடித்துள்ளனர்.

பிரபல அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ், 2018 ஆண்டுக்கான சர்வதேச அளவில் அதிக ஊதியம் பெறும் 10 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்மேன் & ராபின், ஸ்பை கிட்ஸ், தி அமெரிக்கன், சோலாரிஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்த ஜார்ஜ் க்ளூனே முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அக்‌ஷய் குமார் 40.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 284 கோடி) சம்பளத்துடன் ஏழாவது இடத்தையும், சல்மான் கான் 38.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 270 கோடி) சம்பளத்துடன் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளனர். வழக்கமாக இந்தியா சார்பில் தனது இடத்தைப் பதிவு செய்யும் ஷாருக் கான் இம்முறை இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.

கடந்த மாதம் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்த 2018ஆம் ஆண்டுக்கான 100 பொழுதுபோக்கு கலைஞர்களின் பட்டியலிலும் அக்‌ஷய் குமார், சல்மான் கான் இருவரது பெயரும் இடம்பிடித்திருந்தன. இதில் அக்‌ஷய் 76ஆவது இடத்தையும், சல்மான் 82ஆவது இடத்தையும் பிடித்திருந்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share